பொது அறிவு
1. தமிழ்நாட்டில் 17, 000 ஹெக்டே பரப்பளவில் எண்ணெய் பனை
பயிரிடப்படுகிறது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2. தமிழகம் முட்டை உற்பத்தியில்
இரண்டாவது இடத்திலும், பால்
உற்பத்தியில் 9-ஆவது
இடத்திலும் உள்ளது.
3. கடல் மீன் பிடித்தலில் தமிழகம்
மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. உயிரி வளர்ப்பு முறைகள்:
1. வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2. மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3. செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4. பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5. ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6. எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7. சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு
5. தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:
1. பைகாரா (நீலகிரி)
2. குந்தா (நீலகிரி)
3. மோயார் (நீலகிரி)
4. ஆழியார் (கோயம்புத்தூர்)
5. பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்)
6. சோலையார் (கோயம்புத்தூர்)
7. மேட்டூர் (சேலம்)
8. பாபநாசம் (திருநெல்வேலி)
9. கோதையார் (திருநெல்வேலி)
10. பெரியார் (மதுரை)
11. சுருளியார் (தேனி)
5. தமிழகத்தின் அனல்மின்
நிலையங்கள்:
1. நெய்வேலி (கடலூர்)
2. மேட்டூர் (சேலம்)
3. எண்ணுர் (திருவள்ளூர்)
4. தூத்துக்குடி (தூத்துக்குடி)
5. ஜெயங்கொண்டான் (அரியலூர்)
6. தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:
கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
கூடங்குளம் (திருநெல்வேலி)
7. இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ். இது
உலகின் 8-ஆவது
நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின்
திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்
வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய
இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன்
ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது.
8. பெரிய துறைமுகங்கள்:
சென்னை துறைமுகம்
எண்ணூர் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
9. நடுத்தர துறைமுகம்:
நாகப்பட்டினம்
10. சிறிய துறைமுகங்கள்:
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
கடலூர்
கொளச்சல்
காரைக்கால்
பாம்பன்
வாலிநொக்கம்
11. தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல்
மண்டலங்கள் உள்ளன.
சென்னை – சென்னை (தலைமை இடம்)
மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர் (தலைமை இடம்)
மத்திய மண்டலம் – திருச்சி (தலைமை இடம்)
தெற்கு மண்டலம் – மதுரை (தலைமை இடம்)
12. தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல்
அலுவலகங்களின் எண்ணிக்கை – 12, 115
13. அஞ்சல் மற்றும் தந்தி
அலுவலகங்களின் எண்ணிக்கை – 3, 504
14. தமிழகத்தின் முதலாவது மனித
வளர்ச்சி அறிக்கை (H.D.R.) கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
15. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் – பிப்ரவரி 9
16. தமிழக பல்கலைக்கழகங்கள்:
1. சென்னை பல்கலைக்கழகம் – சென்னை (1857)
2. அண்ணாமலை பல்கலைக்கழகம் – சிதம்பரம் (1929)
3. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை (1966)
4. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1971)
5. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – திண்டுக்கல் (1976)
6. அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978)
7. தமிழ் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (1981)
8. பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1982)
9. பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (1982)
10. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல் (1984)
11. அழகப்பா பல்கலைக்கழகம் – காரக்குடி (1985)
12. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – சென்னை (1987)
13. அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர் (1988)
14. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – சென்னை (1989)
15. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (1990)
16. தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் – சென்னை (1997)
17. பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997)
18. தமிழ் இணைய கல்விக்கழகம் - --- (2001)
19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர் (2002)
20. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002)
21. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை (2005)
22. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (2007)
23. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – சென்னை (2007)
24. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (2007)
25. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (2007)
26. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (2007)
27. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
28. மத்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
29. மத்திய பல்கலைக்கழகம் – திருவாரூர் (2009)
30. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் – மதுரை (2010)
17.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு
நிறுவனங்கள்:
1. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) – திருச்சி
2. இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) – சென்னை
3. மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) – சென்னை
4. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
5. மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
6. தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) – சென்னை
7. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) –
காரைக்குடி
8. காடு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்
9. சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி
நிறுவனம் – கோயம்புத்தூர்
10. மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம் – மண்டபம் கேம்ப்
11. இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) – திருச்சி (2011)
18. தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை – கல்லணை
19. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை
20. தமிழ்நாட்டின் மிக ஆழமான அணை – சோலையாறு அணை
21. தமிழ்நாட்டின் நீளமான ஆறு – காவிரி
22. தமிழக கடற்கரை மாவட்டங்கள் (வடக்கிலிருந்து தெற்காக)
1. திருவள்ளூர்
2. சென்னை
3. காஞ்சிபுரம்
4. விழுப்புரம்
5. கடலூர்
6. நாகப்பட்டினம்
7. திருவாரூர்
8. தஞ்சாவூர்
9. புதுக்கோட்டை
10. இராமநாதபுரம்
11. தூத்துக்குடி
12. திருநெல்வேலி
13. கன்னியாகுமரி
23. உலகத்தில் பெரும்புயல் உருவாகும் இடங்கள்
1. வட அட்லாண்டிக் பெருங்கடல்
2. பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி
3. பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி
4. பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
5. இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
6. இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதி
7. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி
24. வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்
1. தமிழ்நாடு வனச்சட்டம் – 1882
2. தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 1949
3. தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம் – 1955
4. வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் – 1972
5. தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980
6. பல்லுயிரினப் பரவல் சட்டம் – 2002
25. தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டம் – நீலகிரி (53.13%)
26. தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டம் – திருவாரூர் (0.01%)
27. தமிழ்நாட்டில் உள்ள 5 தேசிய பூங்காக்கள்:
1. முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி)
2. கிண்டி தேசிய பூங்கா (சென்னை)
3. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (இராமநாதபுரம்)
4. இந்திராகாந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர்)
5. முக்குருத்தி தேசிய பூங்கா (நீலகிரி)
28. தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயம்:
1. நீலகிரி யானைகள் சரணாலயம் (2003)
2. ஆனைமலை யானைகள் சரணாலயம் (2003)
3. கோயம்புத்தூர் யானைகள் சரணாலயம் (2003)
4. ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் சரணாலயம் (2002)
5. தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை (1910)
29. வாழை, மரவள்ளி மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்வகிக்கிறது.
30. மா, இயற்கை இரப்பர், தேங்காய் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில்இரண்டாம் இடம் வகிக்கிறது.
31. காபி, தேயிலை, சப்போட்டா மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம்மூன்றாம் இடம் வகிக்கிறது.
32. இந்தியாவில் தமிழகத்தில் தான் கரும்பு மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (Yield Per hectare) அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment