Thursday, 13 February 2014

போடா போடா புண்ணாக்கு !-குட்டிக்கதைகள்,



அந்த சலூன்காரருக்கு ஒரே பெருமை ! தன் வாடிக்கையாளிடம் தன் சாகச பெருமைகளை 
பீற்றிகொண்டிருந்தார். " சார்இந்த கடைய நடத்த என்ன எல்லாம் வேலை செய்ய வேண்டி இருக்கு சார்.என்கிட்ட  
வர எல்லாரும் திருப்தியா போகணும்னு யோசிச்சி யோசிச்சி புதுசுபுதுசா 'கட்டிங்' பண்ணணும்
 வேற எந்த சலூன்லயும் இல்லாத வசதி இங்க இருக்கு சார்"

வாடிக்கையாளர் : அப்படியா ? அப்ப நீங்க ரொம்ப புத்திசாலி னு சொல்லுங்க

.கடைகாரர் : அதுல என்ன சார் சந்தேகம் ? இந்த காலத்துல என்ன மாதிரி மூளையோட  
இல்லை னாபொழைக்க முடியாது சார்.

வாடிக்கையாளர் : ஹும்....

.கடைக்காரர்சாருக்கு இன்னும் சந்தேகம் போகலே போலஇருங்க இன்னும் கொஞ்ச 
 நேரத்துலஎன் கடைக்கு ஒரு சின்ன பையன் வருவான்தினமும் வருவான்என்கிட்ட  
காசு கேப்பான்நான் ஒருகையில 5 ரூபாயும் இன்னொரு கையில 2 ரூபாயும் வெச்சி எது
  வேணும்னாலும் எடுத்துக்கோ னுசொல்லுவேன்ஹா....ஹா....அவன் தினமும் 2 ரூபாய்யை
  எடுத்துகிட்டு போவான்முட்டா பயஹா...ஹா....! பாத்துகிட்டே இருங்க.

வாடிக்கையாளர் : சரி...இன்னிக்கி பாக்கலாம்.

சொன்னது போலவே ஒரு சிறுவன் கடைக்கு வந்தான்.

சிறுவன் : அண்ணா வணக்கம்நல்லா இருக்கீங்களா ?

.கடைக்காரர் : டேய்வாடா தம்பிநல்லா இருக்கியா ? என்ன வேணும் டா ?

சிறுவன் : அண்ணா முட்டாய் வாங்க காசு குடுண்ணா.

.கடைக்காரர் : ஹா..ஹா...சரிஇந்தா ..5 ரூபாய், 2 ரூபாய் எது வேணுமோ எடுத்துக்கோ.

சிறுவன் அவர் கையில் இருந்து 2 ரூபாய்யை எடுத்துக்கொண்டு ஒடுகிறான்.

வாடிக்கையாளர் : டேய் தம்பிகொஞ்சம் நில்லுடா . நானும் பாத்துகிட்டே தான் இருந்தேன்
 .அவர்தான் 5 ரூபாயும் 2 ரூபாயும் காட்டி எது வேணுமோ எடுத்துக்கோ னு சொல்றாருல்ல
 சரியான ஏமாளியா இருக்கியே? 5 ரூபாய் எடுத்துகிட்டா நெறைய முட்டாய் வாங்கலாம்ல ? ஏண்டா இவ்ளோமுட்டாளா 
 இருக்கே ?

சிறுவன் : சார் , நீங்க வெளிய வாங்க சார்சொல்றேன்.

கடைக்காரர் : ஹா..ஹா...போய் கேளுங்க சார்என்ன நொண்டி சாக்கு சொல்றான்  
பாப்போம்.

வாடிக்கையாளர் கடைக்கு வெளியே சென்று சிறுவனை பார்க்கிறார்.

வாடிக்கையாளர் : இப்போ சொல்லுடா.

சிறுவன் : சார்அது வேற ஒண்ணும் இல்லதினமும் அண்ணா ஒரு 5 ரூபாயும் ஒரு 2 
 ரூபாயும் காட்டிஎது வேணும் னு கேக்கறார்நான் 2 ரூபாய் எடுத்துகிட்டு ஓடினா அவருக்கு 
 என்னை ஏமாத்தினமாதிரி ஒரு சந்தோஷம்ஆனா என்னிக்கு நான் 5 ரூபாய் எடுக்கறேனோ
 அவ்ளோதான் அடுத்த நாள்எனக்கு கிடைக்கிற 2 ரூபாயும் கிடைக்காம போயிடும் 
ஒரு நாளைக்கு கிடைக்கிற 5 ரூபாய் பெரிசா
இல்ல தினமும் கிடைக்கிற 2 ரூபாய் பெரிசா சார் ?
வாடிக்கையாளர் : *??##@!$** ??>= ! 

நீதி : எல்லாம் தெரிந்தவரும் யாருமில்லைஎதுவுமே தெரியாதவரும்யாரும் இல்லை 
தோற்றத்தை பார்த்து எடை போட கூடாது.

No comments:

Post a Comment