Thursday, 13 February 2014

ஆச அதிகம் வச்சி ... !





ஓரு அமைதியான ஊரில் மக்கள் தமக்குள் நிறைவோடும்ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர்
ஊர்மக்களோடு விலங்குகளும் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்தனகுரங்குகள் மிக 
அதிமாகபுழங்கும் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்ட ஒரு வியாபாரி தன் உதவியாளனோடு அங்கு 
வந்தான்.

சாதுரியமான அந்த வியாபாரிஅந்த ஊர் மக்களிடம் ஓர் அறிவிப்பு செய்தான்.

ஊர் பெருமக்களே ! உங்களுக்கோர் நற்செய்திநான் ஒரு விலங்குகள் வியாபாரிபல்வேறு
நாடுகளுக்கு விலங்குகளை எற்றுமதி செய்கிறேன்உங்கள் ஊரில் குரங்குகள் அதிகமாக  
உள்ளனஎன கேள்விப்பட்டு இங்கு வந்தேன்நீங்கள் எனக்கு பிடித்து தரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 25 
ரூபாய்தருகிறேன்எனக்கு உதவி செய்ய முடியுமா ?? “

ஊரில் சும்மா திரிகின்ற குரங்குகளுக்கு 25 ரூபாய் ஒரு நல்ல தொகையாக தெரிந்ததால்ஊர் 
மக்கள்எல்லோரும் மிக மும்முரமாக வியாபாரிக்கு உதவினார்கள்நூற்றுக்கணக்கான குரங்குகள்
பிடிபட்டனமக்களும் நிறைய சம்பாதித்தார்கள்ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முக்கால்வாசி
குரங்குகளும் பிடிபட்டுவிட்டனஇப்போது அந்த வியாபாரி கூறினான் “மக்களே ! எனக்கு இன்னமும்
குரங்குகள் தேவைஆதலால் இனி நீங்கள் பிடித்து வரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 50 ரூபாய்
அளிக்கப்படும்.”

மென்மேலும் மக்கள் குரங்கு பிடிப்பதில் முனைப்பாக ஆனார்கள்ஊரின் அருகிலுள்ள காடுகளில்
குரங்குகளை தேடி பிடிக்கலானார்கள்இம்முறை கிடைத்த குரங்குகளுக்கு அந்த வணிகன் 50ரூபாய் 
 அளித்தான்இவ்வாறு ஆயிரக்கணக்கில் குரங்குகள் சேர்ந்துவிட்டன.

இப்போது அந்த வியாபாரி ஊர்மக்களிடம் “ பெருமக்களே மிக்க நன்றி ! உங்கள் உதவியால் எனக்கு
நிறைய குரங்குகள் கிடைத்துள்ளனஆனால் எனது தேவையோ இன்னும் அதிகம்நான் ஒரு அவசர
வேலையாக என் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளதுஎன் உதவியாளனை இங்கு விட்டு செல்கிறேன்.
 நான் திரும்பி வந்தவுடன் என் உதவியாளனிடம் நீங்கள் பிடித்து கொடுத்த ஒவ்வொரு புதியகுரங்கிற்கும் 
200 ரூபாய் அளிக்கவும் தயாராக உள்ளேன்ஆகையால் உங்கள் வேட்டையைதொடருங்கள் “ என கூறி  
அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

சுற்றுப்புறத்தின் எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால்மேலும் குரங்குகள் எங்கு அகப்படும்என  
தேடி அலைந்தனர் மக்கள்அப்போது அந்த உதவியாளன் மக்களிடம் “ என் எஜமானன் ஊருக்குசெல்லும்
போது குரங்குகளை எண்ணவில்லைமாறாக என்னிடம் அந்த பொறுப்பைகொடுத்துள்ளான் 
அவன் ஒரு கஞ்சன்ஓவ்வொரு குரங்கையும் 1000 ரூபாய்கு விற்பான் ஆனால்உங்களுக்கு வெறும் 
 200 ரூபாய் தான் தருவான்நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள்” எனகூறி “ என் பாதுகாப்பில் 
 இப்போது 1000 கணக்கில் குரங்குகள் உள்ளனஅவற்றை 150 ரூபாய்க்குஎன்னிடம்
 இருந்து வாங்கி கொண்டு , என் எஜமானன் வந்தவுடன் அவனிடம் விற்று 200 ரூபாய்வாங்கி 
கொள்ளுங்கள்.”என்று சொன்னான்மக்களும் அவன் யோசனையின் பேரில் அவனிடம் 150ரூபாய் 
 கொடுத்துவிட்டு குரங்குகளை வாங்கி சென்றனர்குரங்குகளை விற்று விட்டுஉதவியாளனும்
  சத்தமின்றி இரவோடு இரவாக ஊரை விட்டு கிளம்பி சென்று விட்டான்.

ஊர் மக்கள் பேராசையோடு காத்திருந்தார்கள் ஆனால் கடைசி வரை அந்த வியாபாரி ஊருக்கு
திரும்பவில்லை.     
மிச்சம் ஆனது ஊரில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளும்அவற்றின் பெயரால் குல்லா
அணிவிக்கப்பட்ட அப்பாவி ஊர் மக்களும் தான்.

கதையின் நீதி : ஆசைக்கும் ஓர் அளவுண்டு ! ஏமாறுபவன்இருக்கும் வரை ஏமாற்றுபவனும் 
இருப்பான். !




No comments:

Post a Comment