கந்தசாமி என்ற ஒரு
ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால்
வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த
பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல...அவர்கள் உண்ண
உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன்
ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது
இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.
அவன் மீது இரக்கம்
கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க....அவனுக்கு வாத்து ஒன்றை
பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை விற்று
அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம்
என்றும் கூறி மறைந்தார்.
வாத்து தினம்
ஒவ்வொரு பொன் முட்டையிட ...அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.
ஒரு நாள்
கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று 'தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய
பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின்
வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய
பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து
வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன்
வயிற்றைக் கிழித்தான். "ஆ" என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில்
ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே
இருந்தது கண்டு ஏங்கினர்.
தினம் ஒரு பொன்
முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே
பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி
இறந்தனர்.
ஆசை அளவுக்கு
மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும்
கஷ்டத்தையும் தரும்.
No comments:
Post a Comment