Thursday, 13 February 2014

கடமையை செய் ! கடமைக்கு செய்யாதே…!!




 ஒரு கட்டிடத்தில் சிற்பி ஒருவர் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார்.அந்த வழியே போன ஒருவர் அவர் செதுக்குவதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்.அருகில் இன்னொரு சிலை இப்பொழுது செதுக்கும் சிலை போலவே இருப்பதை பார்த்து இரண்டு சிலை ஒரே மாதிரி செதுக்க சொல்லி சொன்னார்களா என்று கேட்டார்.
ஒரு சிலை தான் செதுக்க சொன்னார்கள் அந்த சிலையில் சின்ன குறை இருக்கிறது அதனால் வேறு ஒரு சிலை செதுக்குகிறேன் என்றார்.வந்தவரும் அந்த சிலையை அதிக நேரம் உற்று பார்த்தார் ஆனால் அவரால் எந்த குறையும் கண்டு பிடிக்கமுடியவில்�� .இதில் எந்த குறையும் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லையே என்று சிற்பியிடம் சொன்னார்.
சிலையை நான் முழுவதுமாக முடித்துவிட்டேன் கடைசி நேரத்தில் சின்னதாக ஒரு கீரல் விழுந்து விட்டது, சிலையின் மூக்கு பகுதியில் உற்று பாருங்கள் சின்னதாக ஒரு கீரல் விழுந்துள்ளது தெரியும் என்று சிற்பி சொன்னார்.வந்தவரும �� அந்த சிலையை நன்கு உற்று பார்க்கும்போது அந்த கீரல் தெரிந்தது.
இந்த சிலையை எங்கே வைக்க போகிறீர்கள் என்று கேட்டார்.அதோ இருக்கிறதே 20 அடி தூண் அதன் மேலே வைக்கப்போகிறோம் என்று சிற்பி சொன்னார்.
அவ்வளவு மேலே வைக்கும் போது இந்த கீரல் யாருக்கும் தெரியாதே அந்த சிலையையே வைத்து இருக்கலாமே என்று வந்தவரும் சொன்னார்.
மேலே இருப்பவர்க்குதெரியும் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தார் சிற்பி.
எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.கடமைய �� செய்யுங்கள்,கடமைக ��கு செய்யாதீர்கள்

No comments:

Post a Comment