இன்றைய நிலையில் பேச்சு வழக்கு மட்டுமின்றி
எழுத்து வழக்கிலும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமாகிவிட்டது. பல ஆங்கில வார்த்தைகள்
தமிழ் வார்த்தைகளாக பாவித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
குறிப்பாக, வாகனங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கில
வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் போக்கு நிலவுகிறது. பட்டி தொட்டி வரை பஸ்
என்றால்தான் தெரியும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், வாகனங்களின்(ஊர்திகள்) உரிய தமிழ் பெயர்களை
இந்த செய்தியில் காணலாம்.
Bicycle
– சைக்கிள் – மிதிவண்டி
Motobike
– மோட்டார்சைக்கிள் – உந்துருளி, உந்துவளை
Autorickshaw
– ஆட்டோரிக்ஷா – தானி, மூவுருளி உந்து
Van
– வேன் – கூடுந்து, சிற்றுந்து
Pick
up Truck – பிக்கப் டிரக் – பொதியுந்து
Jeep-
ஜீப் – கடுவுந்து, வல்லுந்து
SVU
– எஸ்யூவி – பெருங்கடுவுந்து
Lorry/
Truck – லாரி/ டிரக் – சுமையுந்து, சரக்குந்து
Ambulance
– ஆம்புலன்ஸ் – திரிவூர்தி
Bus-
பஸ் – பேருந்து
Train
– ரயில் – தொடருந்து, தொடர் வண்டி, புகை வண்டி, புகை ரதம்
Helicopter
– ஹெலிகாப்டர் – உலங்கு வானூர்தி
Aeroplane
– விமானம் – வானூர்தி
Fighter
Jet – போர் விமானம் – போர் வானூர்தி
Boat
– படகு – படகு, தோணி
Ship
– கப்பல் – நாவாய்(பெரிய கப்பல்)
Motor
Vehicle – மோட்டார் வாகனம் – தானுந்து
மோட்டார்
வாகனங்களை மட்டுமின்றி காரையும் தானுந்து என்று குறிப்பிடப்படுகிறது. தவிர, இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர
வாகனங்கள் என்றும் பொதுவான வகைகளில் பிரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment